• RSS
  • Facebook
  • Twitter
Comments

மார்க் ட்வைன் எழுத்தாளர், விளையாட்டு வீரர், தத்துவஞானி என்று பலமுகம் கொண்டவர். பில்லியட்ஸ் விளையாட்டில் கில்லாடி. அவரது காலத்தில் பில்லியட்ஸ் விளையாட்டில் அவரை மிஞ்ச ஆளில்லை. அவரை நன்கறிந்த சாதாரண வீரர் ஒருவர், ஒருநாள் அவரை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. உடனே அவர் தன்னுடன் சிறிது நேரம் விளையாட வர முடியுமா என்று அழைத்தார். ஆனால் அப்போது விளையாட மனமில்லாத ட்வைன், விளையாட சம்மதிக்கவில்லை, என்னை ஆடி ஜெயித்துவிடுவீர்களா? என்று அவன் வற்புறுத்திக் கேட்டான், உடனே டுவைன் சரி நான் ஆடுவதற்கு சம்மதிக்கிறேன் ஆனால் நீங்கள் இடது கையால் ஆட வேண்டும், ஜெயிப்பவருக்கு 100 டாலர் பரிசு சம்மதமா? என்றார், அதற்கு சம்மதம் தெரிவித்தார் அந்த வீரர்,
ஆட்டம் தொடங்கியது... இறுதியில் சாதாரண வீரர் ட்வைனை வீழ்த்திவிட்டார். அவரது ஆட்ட நேர்த்தியைக் கண்டு அசந்துவிட்டார் ட்வைன்.
உடனே ட்டிவைன் அவரிடம் கூறினார். "பரவாயில்லையே இடது கையால் ஆடியே என்னைத் தோற்கடித்துவிட்டீர்களே, வலது கையால் ஆடியிருந்தால் வெற்றி விகிதம் இன்னும் அதிகம் இருந்திருக்குமே? " என்று ஆச்சரியமாகச் சொன்னார்,
ஆனால் அந்த சாதாரண வீரர், சாதாரணமாக சொன்னார், "நான் இயல்பாகவே இடது கைப்பழக்கம் உள்ளவன்தான்!
வாயைப் பிளந்தார் ட்வைன்.
போட்டியாளரையும், எதிரியையும் சாதாரணமாக எடைபோடுபவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும்.

Categories:

One Response so far.

Leave a Reply